எம்மை பற்றியது

ஏற்றுமதி அபிவிருத்திச் சபை என வழமையாக அழைக்கப்படும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஏற்றுமதியின் அபிவிருத்திக்கும், மேம்பாட்டிற்கும் பொறுப்புடைய ஒரே பிரதான நிறுவனமாக விளங்குவதோடு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது.

ஏற்றுமதி அபிவிருத்தி கொள்கையினைத் தயாரிக்கும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சா்களின் குழுவின் நிறைவேற்றுப் பிரிவாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை விளங்குகின்றது. இக்குழு இலங்கையின் மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் தலைமை வகிக்கப்படுகின்றது.

நோக்கு

புத்தாக்க தாயரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான ஒரு முக்கிய ஏற்றுமதி மையமாக இலங்கையை நிலைப்படுத்தல்.

செயற்பணி

கண்டுபிடிப்புகள், தொழில் முயற்சிகள் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பு மூலம் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஏற்படுத்துதல்.

எம்மை பற்றியது

தலைவரே பிரதான நிறைவேற்று அதிகாரியாக உள்ளதோடு அவர் பணிப்பாளர் நாயகம் மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோரால் உதவப்படுகின்றார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் இலக்கு இலங்கை நிறுவனங்கள் சர்வதேச ரீதியில் வணிகத்தை விரிவுபடுத்த உதவுதல் மற்றும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தல், அதன்மூலம் நாட்டின் ஏற்றுமதி விற்பனை மற்றும் தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்.

இலங்கை சந்தை வாய்ப்பு மற்றும் பல் துறைகளின் விநியோக பரம்பல் பற்றிய எமது அறிவின் மூலம், இலங்கைக்கான உங்கள் அரசாங்க அல்லது நிறுவன ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.