இலத்திரனியல் மேம்பாட்டுச் சேவைகள்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்படும் இலத்திரனியல் வர்த்தக வசதிகளின் மூலம் உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களுக்கு சர்வதேச சந்தைக்குள் அதிகளவில் போட்டித் தன்மையுடன் செயற்படுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்

இச்சேவைகளின் ஊடாக உங்களுக்கு

  • இணையத்தளத்தின் ஊடாக உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் முடியும்
  • இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்தளத்தில் விளம்பரமொன்றினை வெளியிடுவதன் மூலம் நீங்கள் உங்களது உற்பத்திப் பொருட்களையும், சேவைகளையும் உலகம் பூராகவும் பரந்துள்ள மில்லியன் அளவிலான கொள்வனவாளர்களை ஊக்குவிக்க முடிகின்றது.
  • தகவல்களைத் தேடவும், ஆலோசனை சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்
  • திட்டமிடப்பட்ட ஏற்றுமதி/இறக்குமதிப் புள்ளிவிபரத் தரவுகளை பெற்றுக் கொள்வதற்கான சேவை

இலத்திரனியல் விளம்பரங்களைப் பிரசுரிப்பதற்கான சேவை

இணையத் தளத்தினை திட்டமிடலும், வடிவமைத்தலும்

உற்பத்தித் திறன் உள்ள வகையில் குறைந்த விலையில் எம்மிடமிருந்து உங்கள் இணையத் தளத்தினை வடிவமைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் உற்பத்திப் பொருட்களையும், சேவைகளையும் உலகம் பூராகவும் பிரபல்யப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்

இணையத்தள விளம்பரங்களை பிரசுரிக்கும் சேவைகள்

எமது பணியாளர்களைக் கொண்டு உமது வர்த்தக விளம்பரங்களை வடிவமைத்து www.srilankabusiness.com இணையத்தளத்தின் ஊடாக பிரசுரிக்க முடியும்.

இணையத்தள இணைப்புக்கள்

www.srilankabusiness.com இணையத்தளத்தின் ஊடாக உங்களது இணையத் தளத்திற்குள் பிரவேசிப்பதற்கு இணையத்தள இணைப்புக்களை வடிவமைப்பதற்கான வசதிகளைத் தற்போது சகல ஏற்றுமதியாளர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் உங்கள் இணையத் தளத்திற்குள் இலகுவாகப் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதோடு, உங்களுக்கு அதிக அளவிலான நுகர்வோர் குழுவொன்றையும் அணுகக் கூடியதாக இருக்கும். அதற்கு ரூபா 2000/= வருடாந்தக் கட்டணமாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் அறவிடப்படும்.

வர்த்தகத் தகவல்களைத் தேடலும், ஆலோசனை சேவைகளும்

வியாபார மற்றும் வர்த்தகம் தொடர்பான பிரதான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் பேணப்பட்டு வரும் தனி பயனுள்ள ஒரு சேவையாகும்.

வர்த்தக வாய்ப்புக்கள், வசேட கொள்வனவாளர்கள் தொடர்பான தகவல்கள், பொருட்களின் தர நியமங்கள், சந்தை ஒழுங்கு விதிகள், ஏற்றுமதி / இறக்குமதி புள்ளிவிபரத் தரவுகள், இலக்காகக் கொள்ளப்பட்ட சந்தைகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தகக் கண்காட்சிகள், நிகழ்ச்சித் திட்டங்கள் போன்ற தரவுகளைத் தேடிக் கொடுப்பதற்கு எமது பணியாளர்கள் எந்நேரமும் ஆயத்தமாக இருக்கின்றார்கள்.

இறக்குமதி / ஏற்றுமதி புள்ளி விபரத்தரவுகளை வழங்கும் சேவைகள்

எமது நிகழ்நிலையிலான (online) இறக்குமதி / ஏற்றுமதி புள்ளி விபரத் தரவுகளை வழங்கும் சேவைகளுடன் பதிவு செய்து இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் புதிய தரவுகளைப் பெற்றுக் கொள்ளவும், அதன் மூலம் சந்தைப் போக்குகளைத்தெரிந்து கொள்ளவும் முடியும்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுடன் தொடர்பு கொள்ளவும்
தகவல் தொழில்நுட்ப் பிரிவு

தொலைபேசி: 94-11-2305209

மின்னஞ்சல் : [email protected]