இணையத்தளத்தினூடாக ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தலும், விற்பனை செய்வதற்கான இலத்திரனியல் சந்தை வசதியும்

உங்கள் தயாரிப்புகளை இணையத்தில் காட்சிப்படுத்தவும் விற்கவும்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்தளமான www.srilankabusiness.com இலங்கையின் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை உலகிற்கு திறந்து வைக்கும் ஒரு வாயிலாக வசேட சேவையொன்றை மேற்கொள்கின்றது. இப்பணியின் ஊடாக உலகம் பூராகவும் உள்ள கொள்வனவாளர்கள், விற்பனையாளர்கள், பொருட்களை கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்கள், சந்தை மற்றும் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் தொடர்பான தகவல்களுடன் ஒரே இலத்திரனியல் மேடையில் ஒன்றுபடுத்தப்படுவதோடு, சிரமம் வாய்ந்த இப்பணியை மிக வினைத்திறனான முறையில் மேற்கொள்வதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் மிகவும் பாதுகாப்பானதும் நம்பிக்கையுடைய இலத்திரனியல் சந்தை முறைமைக்கான கணணி மென்பொருள் ஒன்றை கொள்வனவாளர்களும், விற்பனையாளர்களும் பயன்படுத்தக் கூடிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கணணி மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் உலகம் பூராகவுமுள்ள கொள்வனவாளர்கள் உலகின் எந்த ஒரு இடத்திலிருந்தும் இணையத்தளத்தின் ஊடாக இலகுவாக கொள்வனவு செய்யக் கூடியதாக உள்ளதோடு, அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை அவர் விரும்பும் எந்தவொரு இடத்திற்கும் எடுத்துச் செல்வதற்கான பொறுப்பை ஏற்பதற்கும் உலகின் பிரதான பொருட்களை போக்குவரத்து செய்யும் கம்பனிகள் இரண்டு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்துள்ளன. இச்சேவைகளின் ஊடாக உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இலகுவான முறையில் உலகளாவிய சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது

நீங்கள் ஏன் www.srilankabusiness.com எனும் இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்??

  • உங்கள் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை குறைவான செலவில் மேம்படுத்துவதற்கான உயர்ந்த அளவில் கிரய வினைத்திறனையுடைய மேம்பாட்டுச் சாதனமாகும்.
  • பரந்த அளவிலான நுகர்வோரை அணுகக் கூடியதாக உள்ளமை
  • அரசாங்க அனுசரணையுடைய இலத்திரனியல் சந்தை மற்றும் வர்த்தக வாயிலின் ஊடாக உங்கள் வர்த்தகத்தினை நம்பிக்கையான முறையில் விருத்தி செய்யக் கூடியதாக உள்ளமை
  • தொடர்பாடல் மற்றும் விளம்பரச் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைதல்
  • இணையத்தளத்தின் ஊடாக ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வசதி
  • உங்களின் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை, போக்குவரத்துத் துறையில் உலகளாவிய ரீதியில் ஈடுபட்டுள்ள கம்பனிகளினால் உரிய நேரத்தில் கொள்வனவாளர்களுக்குக் கிடைக்கச் செய்தல்
  • பிரதான சர்வதேச வங்கியொன்றின் ஊடாக இரகசியத் தன்மையைப் பாதுகாக்கக் கூடிய வகையில் பாதுகாப்பான முறையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளமை

கட்டணங்கள் ?

பதிவுசெய்தல் – இலவசம்
ஒரு நிறுவனம் 10 பொருட்களை காட்சிப்படுத்த முடியும்.
நிறுவன விபரம் மற்றும் உற்பத்தி பொருள் புதுப்பித்தல் உள்ளடங்களாக வருடாந்த புதிப்பித்தல் கட்டணம் –1,000/= ரூபா

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுடன் தொடர்பு கொள்ளவும்-
Information Technology Division

தொலைபேசி 94-11-2305209

மின்னஞ்சல் : [email protected]

இலத்திரனியல் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு