எமது ஒழுங்கு விதிகளும் கடமைகளும்

இலங்கையின் ஏற்றுமதிகளின் அபிவிருத்திக்கும், மேம்பாட்டிற்கும் பொறுப்பான பிரதான அரச நிறுவனம் என்ற வகையில், நாம் பின்வரும் கடமைகளை நிறைவேற்றுகின்றோம் :

 • கொள்கை ஆலோசனை - ஏற்றுமதிக்கான உகந்த சுழலொன்றை உருவாக்கும் நோக்குடன் ஏற்றுமதி அபிவிருத்திக் கொள்கைகள் தொடா்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்குதல்
 • கண்காணித்தல் -ஏற்றுமதித் துறையின் செயலாற்றத்தினைக் கண்காணித்தல்
 • மேம்பாட்டாளா் - இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான உற்பத்திப் பொருட்களின் வடிவமைப்பு, சந்தை மற்றும் ஏனைய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
 • வசதியளிப்பாளா் - ஏற்றுமதி அபிவிருத்திக்கான மையப்புள்ளி என்ற வகையில் சகல பங்காளா்களுடனான ஏற்றுமதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வசதியளித்தலும், ஒருங்கிணைப்புச் செய்தலும்
 • அறிவை வழங்குதல் - ஏற்றுமதி வா்த்தகம் தொடா்பான சகல விடயங்கள் தொடா்பான ஆலோசனை சேவைகளையும், மற்றும் தகவல்களையும் வழங்குதல்

எமது செயற்பாடுகள்

முகாமைத்துவ சபை

அமைச்சா்களின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் பிரதிநிதித்துவம் வகிக்கும் அமைச்சுக்களின் செயலாளா்கள், முதலீட்டுச் சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி, உள்ளடங்கலாக ஆறு உறுப்பினா்கள், பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்பட்ட தனியார் துறை தொழில் முயற்சிகளிலிருந்து ஆறு உறுப்பினா்கள் (கைத்தொழில், வியாபாரம், வர்த்தகம், நிதி மற்றும் ஏனைய தொடர்புடைய பரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆகியோரினால் தலைவருக்கு ஆதரவளிக்கப்படுகின்றது.

பிரதான நிறைவேற்று அதிகாரியாக விளங்கும் தலைவர், பணிப்பாளா், நாயகத்தினாலும், ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பணிப்பாளரினால் தலைமை வகிக்கப்படும், பல பிரிவுகளினால் ஆதரவளிக்கப்படும் இரண்டு மேலதிகப் பணிப்பாளா் நாயகங்களினாலும் ஆதரவளிக்கப்படுகின்றார்.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் முழுமையான நோக்கம்

2022 ஆம் ஆண்டளவில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களினதும், சேவைகளினதும் ஏற்றுமதிப் பெறுமதியை ஐ.அ.டொ.28 பில்லியன்களாக அதிகரித்தல். ஐரோப்பிய சங்கம் மற்றும் ஐக்கிய அமெரி க்கச் சந்தைகளில் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான சந்தை ஐரோப்பிய சங்கம் மற்றும் ஐக்கிய அமெரி க்கா தவிர்ந்த ஏனைய வெளிநாட்டுச் சந்தைகளுக்கான ஏற்றுமதிகளை, 2022 ஆம் ஆண்டளவில் 50 சதவீதத்தினால் அதிகரித்தல்.

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்திற்கு ஏறத்தாழ 80 சதவீத பங்களிப்பைச் செலுத்தும் இனங்காணப்பட்டுள்ள பிரதான ஏழு உற்பத்தித் துறைகளில் விசேட கவனம் செலுத்தலும், அத்துறைகளில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியை அடைதலும்.

தெரிவு செய்யப்பட்ட சந்தைகளில் ஒன்றிணைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கையின் சகல ஏற்றுமதிகள் தொடர்பாக மிகச் சாதகமானதும் சிறந்த மனப்பான்மையினையும் கொண்ட பிரதிபிம்பமொன்றை சர்வதேச ரீதியில் ஏற்படுத்துதல்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் உள்ளடங்கலாக ஏற்றுமதி வர்த்தகத்தின் நன்மைகளை அத்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் கிடைப்பதற்கு வழியமைத்தல்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஊழியா்களின் உற்பத்தித் திறன் மற்றும் அர்ப்பணிப்பு என்பன தொடா்பாக விசேட கவனம் செலுத்தி இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் முக்கிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படக் கூடிய விசேட திறமை வாய்ந்த குழுவொன்றினை உருவாக்குதல்.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிரதான தொழிற்பாடுகள்

 • கொள்கைப் பரிந்துரைகளை மேற்கொள்வதன் மூலம் தொடா்புடைய பங்காளிகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஆதரவுடன் பேரண்ட மற்றும் நுண் பொருளாதாரச் சூழலின் விருத்திக்கு அதாவது ஏற்றுமதிகளின் அபிவிருத்திக்கு உதவுதல்
 • தொடர்புடைய பங்காளிகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஆதரவுடன் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் மற்றும் துறை வாரியான அபிவிருத்தித் திட்டங்களையும் தயாரித்தலும், நடைமுறைப்படுத்தலும்
 • வா்த்தகப் பேச்சு வார்த்தைகள் மற்றும் தொடா்புடைய பின்னூட்டல் நடவடிக்கைகள் போன்றவற்றில் சுறுசுறுப்பான ஈடுபாட்டுடன் ஏற்றுமதியாளர்களுக்கு சாத்தியமான வெளிநாட்டுச் சந்தைச் சூழலொன்றை வழங்குதல்
 • இலங்கையின் உற்பத்திப் பொருட்களுக்கும் மற்றும் சேவைகளுக்கும் சந்தை ஆராய்ச்சிகளையும் / அளவை ஆய்வுகளையும் நடாத்துதலும், சந்தை வாய்ப்புக்களை இனங்காணலும்
 • ஏற்றுமதியாளா்களின் போட்டித் தன்மையை விருத்தி செய்வதற்கு / அதிகரிப்பதற்கு எற்றுமதியாளர்களுக்கும் / சாத்தியமான எற்றுமதியாளர்களுக்கும் உதவும் நோக்குடன் தொழில்நுட்ப தர மற்றும் பொதியிடல் அபிவிருத்தி உள்ளடங்கலாக நிரம்பல் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
 • நடைமுறையிலுள்ள சந்தைகளை விருத்திவடையச் செய்தல் மற்றும் ஏற்றுமதியாளர்களும் / சாத்தியமான எற்றுமதியாளர்களும் புதிய சந்தைகளுக்குள் பிரவேசிப்பதற்கு ஆதரவளித்தல் போன்ற இன்னோரன்ன நோக்கங்களுக்காக ஒன்றிணைக்கப்பட்ட உற்பத்தி அபிவிருத்தி மற்றும் சந்தை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகியனவற்றைத் தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும்
 • சர்வதேச சந்தையில் சுறுசுறுப்பான செயற்பாட்டுடன் இயங்குவதன் மூலம் இலங்கையின் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
 • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் துறையின் ஏற்றுமதிகளின் சாத்தியப்பாடு தொடர்பான விழிப்புணா்வினை அதிகரித்தல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளா்களை ஏற்றுமதி செய்வதற்கு ஊக்குவித்தல் மற்றும் உதவுதல் ஆகிய இன்னோரன்ன நோக்கங்களுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான ஏற்றுமதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
 • சந்தைகள், உற்பத்திப் பொருட்கள், சுங்க வரிகள், ஒழுங்கு விதிகள், சர்வதேச பொருட்களின் விலைகள், தேசிய/சர்வதேச வா்த்தகப் புள்ளி விபரங்கள் அதே போல :

  -சர்வதேச தரவு அடிப்படைகளை கணணியூடான நிகழ்நிலைக்கான பிரவேசம்
  -அலுவலகத்துக்குள்ளேயான வா்த்தக வெளியீடுகளின் அடைவு
  -ஏற்றுமதியாளா்களுக்கான ஒலி ஒளிக் கருவிகளை வழங்கல் மற்றும் தொரிவு செய்யப்பட்ட ஏற்றுமதித் துறைகள் மீதான காணொளித் திரைப்படங்களின் உற்பத்தி போன்றவை தொடா்பான புதிய தகவல்களை வழங்கல்

 • தகவல்கள் மற்றும் தொடா்பாடல் தொழில்நுட்பம் ஆகியனவற்றின் பயன்பாட்டுடன் ஏற்றுமதியாளா்களும் மற்றும் சாத்தியமான ஏற்றுமதியாளா்களும் அவா்களது வா்த்தகங்களை மிக வினைத்திறனான முறையில் நடாத்துவதற்கு ஆதரவளித்தல்
 • தொடா்புடைய நிறுவனங்களின் உதவியுடன் ஏற்றுமதித்துறையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவுவதன் மூலம் வர்த்தக வினைத்திறனை அடைவதற்கு ஏற்றமதித் துறைக்கு உதவுதல்
 • ஏனைய சேவை வழங்குனர்களின் ஒருங்கிணைப்புடன் ஏற்றுமதி ஆதரவுச் சேவைகளை விருத்தி செய்வதற்கு உதவுதல்
 • உலகச் சந்தையில் வர்த்தக வாய்ப்புக்களை அபிவிருத்தி செய்வதில் ஏற்றுமதியாளர்களுக்கும் மற்றும் சாத்தியமான ஏற்றுமதியாளர்களுக்கும் உதவும் நோக்குடன் சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனங்கள், ஏனைய உள்நாட்டு வர்த்தக ஆதரவு நிறுவனங்கள் ஆகியனவற்றுடன் ஒன்றிணைந்து பணிபுரிதல்
 • ஏற்றுமதியாளர்களினதும், சாத்தியமான ஏற்றுமதியாளர்களினதும் தொழில்நுட்பம், உற்பத்தித் திறன், நிதி / பொது முகாமைத்துவம், ஏற்றுமதிச் சந்தைப்படுத்தல் மற்றும் இன்னோரன்னவற்றிலான திறன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் விருத்தி செய்வதற்கும் உதவும் நோக்குடன் ஏற்றுமதியாளர்களுக்கும்/ சாத்தியமான ஏற்றுமதியாளர்களுக்கும், மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்குமான மனித வள அபிவிருத்திப் பயிற்சி /அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

EDB எவ்வாறு வேலை செய்கிறது??

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையானது எவ்வாறு தொழிற்படுகின்றது? இலங்கை ஒரு சிக்கலான சந்தை பிரதேசம்.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு மாகாணங்களில் பரந்து காணப்படுகிறார்கள்.

10,000 இற்கும் அதிகமான வர்த்தக நிறுவனங்களுடனும், 10,000 வருடாந்த வர்த்தக கண்காட்சிகள், மற்றும் வெளியீடுகளுடன், ஒரு சர்வதேச நிறுவனம் தனது கவனத்தை ஓர் இட்த்தில் குவிப்பது கடினமானது.எனினும் இலங்கை ஏற்றுமதி சபையானது பயிற்ச்சி மூலம் இலங்கயின் சிக்கலான சந்தை பற்றி அறிந்துள்ளது எனவே நிறுவனங்களின் முயற்ச்சி.

ஆசிய சந்தைகளில் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை உங்கள் நிறுவனத்தை ஒரு வெற்றிகரமான போட்டியாளராக எப்படி ஆக்குகிறது என்பதை இங்கு பார்க்கலாம்:

 • இலங்கை சந்தையில் நுழைதல் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஊடுருவி வருவதற்கான உத்திகளை மதிப்பிடுகின்றது.
 • ஒரு பொருளை அல்லது சேவையை தெரிவு செய்வதில் முக்கிய வாடிக்கையாளர்கள், முக்கிய முடிவு எடுப்பவர்களை தெரிவு செய்தல் மற்றும் பிரதான பிரச்சினைகளை அடையாளம்.காணல்.
 • வரவு செலவு திட்டத்தில் தங்கியிருக்கும் கொள்வனவாளர்களுக்கு உகந்த வியாபார தொடர்பு திட்ட்த்தை தீர்மானிக்கின்றது.
 • சிறந்த முடிவுகளைத் தோற்றுவிக்கும் விற்பனை கட்டமைப்பை அதிகரிக்கிறது.
 • ஒழுங்கற்றவற்றை தவிர்த்து பயனுள்ள வர்த்தக நிகழ்வுகளை தீர்மானிக்கின்றது.
 • உங்கள் நாட்டிலிருந்து உங்கள் நிறுவனம் மற்றும் தயாரிப்புகளின் வெளிநாட்டு கொள்வனவாளரின் தற்போதைய கருத்துக்களை பகுப்பாய்வு செய்கிறது.
 • வாங்குபவரின் புரிந்துணர்வு உங்கள் நாட்டின் மற்றும் உங்கள் நாட்டின் முக்கிய திறன்களை பற்றி வாங்குபவரின் புரிந்துணர்வை எப்படி மேம்படுத்தலாம் என பரிந்துரைகளை செய்கிறது.

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையை உங்கள் நிறுவனத்தின் இலங்கை அடிப்படை வியாபார தினைகளமாக மற்றும் ஏற்றுமதி திணைக்கள தரகராக்குதல்.

மாறும் வெளிநாட்டு சந்தையில் ஏதேனுமொரு தயாரிப்பு அல்லது சேவைக்கான வாய்ப்புகள் உள்ளன. இருந்தபோதிலும், அங்கு வெற்றி பெற திடமான திட்டம் மற்றும் மூலோபாயம்,அர்ப்பனிப்பு மற்றும் தியாகம், மற்றும் அமைப்பை மாற்றியமைக்கும் அறிவு போன்றன தேவைபடுகின்றது.

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையானது பல்வேறு வளங்களை இடுவதன் மூலம் உங்கள் வெளியீட்டில் இடுவதன் மூலம் பெறுபேறுகளை அதிகரிக்கின்றது.

எங்கள் சேவைகள்

 • சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி மற்றும் செயலாக்க கல்வி
 • விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள்
 • சார்க் வலய விற்பனை அமைப்பு மற்றும் விநியோகம்
 • இலங்கை சந்தைபிரதேசத்தை அறிதல் மற்றும் வாய்ப்புகளை இலங்கை வணிகத்தில் சரியாக பயன்படுத்தல்
 • இலங்கை வர்த்தக கண்காட்சியில் வியாபார உதவி
 • வியாபார தரவுதளம்