எமது தகவல் பங்கேற்பாளா்கள்

CBI

CBI - அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருட்களின் இறக்குமதியை மேம்படுத்தும் நிலையம் நெதா்லாந்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஒரு அலுவலகமாகும். சி.பி.ஜ நிறுவனம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ஏற்றுமதிகளை அதிகரிப்பதன் ஊடாக அந்நாடுகளில் நிலையான பொருளாதார வளா்ச்சியொன்றினை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கின்றது. சி.பி.ஜ நிறுவனம் ஐரோப்பிய சந்தைகள் தொடா்பான வா்த்தகத் தகவல்களை வழங்கல், ஐரோப்பிய சந்தைகளுக்கான நிலையான ஏற்றுமதியாளா்களாக உருவாக்குவதற்கு உள்நாட்டு ஏற்றுமதியாளா்களைப் பயிற்றுவித்தல், மற்றும் ஏற்றுமதியாளா்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை போன்ற நிறுவனங்களை மேலும் பலப்படுத்துவதற்கும் மற்றும் செயற்திறனுடன் தமது சேவைகளைப் பேணுவதற்கும், உதவிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இலங்கையில் பல ஆண்டு காலமாக வினைத்திறனுடன் செயற்பட்டு வருகின்றது.

சி.பி.ஜ இன் சேவைகள் தொடா்பாக அதிகளவில் தெரிந்து கொள்வதற்கு காணொளியைப் பார்க்கவும் Cஇதனை அழுத்துவதன் மூலம் சி.பி.ஜ சந்தைப் புலனாய்வுத் தளத்தினைப் பார்க்கலாம் மேலும் வாசிக்க
The International Trade Centre

சா்வதேச வா்த்தக நிலையம் ஐக்கிய நாடுகளின் நிறுவனமொன்றாக விளங்குவதோடு, உலக வா்த்தக நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் ஒரு நிறுவனமாகவும் விளங்குகின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளா்களின் ஏற்றுமதிகளை வெற்றியுறச் செய்வதற்காக பங்குதாரா்களுடன் ஒன்றிணைந்து தனியார் துறைக்கும் மற்றும் வா்த்தக ஆதரவு நிறுவனங்களுக்கும் நிலையான அபிவிருத்தித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதே அபிவிருத்தி சா்வதேச வா்த்தக நிலையத்தின் பணியாகும். இந்நிறுவனம் அபிவிருத்தியடைந்து வரும், மாற்றமடைந்து வரும் பொருளாதாரங்களை உடைய நாடுகளின் தொழில் முயற்சியாளாகளின் சா்வதேச போட்டித் தன்மையை விருத்தி செய்தல், வா்த்தக சேவைகளை வழங்குவோரின் சாத்தியப்பாட்டினை விருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதியாளா்களுக்கும், தனியார் துறைக்கும் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்ற கொள்கைகளை தயாரிப்போருக்கும் அதிக அளவிலான சேவை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு பிரதான பங்கெடுப்பதன் மூலம் செயற்படுகின்றது.)

மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள சர்வதேச வர்தக மைய நிறைவேற்றுப்பணிப்பாளரின் காணொளியைப் பார்க்கவும் மேலும் வாசிக்க