EDB சேவைகளுக்கான பதிவு

அடிப்படை ஆவணங்கள் கிடைக்கப்பெற்றால் ஏற்றுமதி செய்ய விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு தற்காலிக பதிவு சான்றிதழ் வழங்கப்படும். எனினும், உங்கள் பதிவு "ஏற்றுமதியாளர்" என்ற நிலையைப் பெறுவதற்கு, நீங்கள் CUSDEC படிவம், இறக்குமதி/ ஏற்றுமதி கட்டண படிவம் மற்றும் வர்த்தக விலைப்பட்டியல், VAT & TIN சான்றிதழ்கள் போன்ற உங்கள் ஏற்றுமதி தொடர்பான ஆவண ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.ஒரு வருட காலப்பகுதிக்குள்.

Download Application & Procedure Form

பதிவிற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஒவ்வொரு ஏற்றுமதியாளருக்கும் ஒவ்வொரு பதிவு எண் சபை மூலம் வழங்கப்படும்.

இந்த விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவு எண் பரிமாற்றம் செய்யப்படா முடியாது.

  • இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள் பதிவுச் சான்றிதழ்களை பதிவு செய்வதற்கான பதிவு இலக்கத்தை மேற்கோள் காட்டி வருடாந்த அடிப்படையில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு தகவல் வழங்க வேண்டும்.
  • மாற்றங்கள் அல்லது சேர்த்தல்கள் மட்டுமே குறிக்கப்பட வேண்டும்
  • மாற்றங்கள் இல்லை என்றால், எந்த மாற்றமும் இல்லை என்பதை படிவத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்
  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்


-->

இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் கோப்பகத்திற்கான பதிவு

இப்பதிவுத் திட்டம் வர்த்தக வசதியளிப்பு மற்றும் வர்த்தகத் தகவல்கள் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றது. இத்திட்டத்தின் நோக்கம் தேசிய ஏற்றுமதிக் கொள்கைகளைத் தயாரிப்பதற்கு உதவக் கூடிய புதிய தரவு வங்கியொன்றினைப் பேணுவதும், உள்நாட்டு வழங்குனர்களை அடைவதற்கு வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கான வழிகாட்டியாகவும் பணியாற்றுவதற்காகும். இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கான கோப்பகத்திற்குப் பதிவு செய்வதற்கு ஏற்றுமதியாளர்கள் குறிப்பிட்ட படிவத்தினை பூர்த்தி செய்து வர்த்தக வசதியளிப்பு மற்றும் வர்த்தகத் தகவல்கள் பிரிவிற்குச் சமர்ப்பித்தல் வேண்டும். அதே படிவத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல்களின் வருடாந்தப் புதுப்பிப்பினை மேற்கொள்ள முடியும்.

Download Application - Directory of Sri Lankan Exporters


ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இ-சந்தைத் தளத்திற்கான பதிவு

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளமான www.srilankabusiness.com இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை உலகத்திற்குக் காட்சிப்படுத்துவதற்குப் பொருத்தமான வரித்தகத் தளமாகும். கணணியுடனான நிகழ்நிலையில் உற்பத்திப் பொருட்களையும், சேவைகளையும் மேம்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடி இ-சந்தைத் தளமாகும். நுகர்வோர், பரந்த வியூகத்தைக் கொண்ட ஏற்றுமதித் தரத்திலான இலங்கை உற்பத்திப் பொருட்களையும், சேவைகளையும் அடையக் கூடியதாக உள்ளதோடு, பாதுகாப்பான கொடுப்பனவு வழியின் ஊடாக கணணியுடனான நிகழ்நிலையில் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய முடியும்.

இம்முன்னோடி முயற்சி சந்தை மற்றும் உற்பத்திப் பொருட்களின் தகவல்களுடன் வழங்குனர்கள், கொள்வனவாளர்கள், கப்பல் வாயிலாக வர்த்தகத்தில் ஈடுபடுவோர், ஏற்பாட்டியல் மற்றும் நிதி போன்ற இன்னோரன்னவற்றை ஒரே இடத்திற்குக் கொண்டு வருகின்றது. இத்திட்டம் நிகழ்நிலையில் கொள்வனவுகளை மேற்கொள்ள வழி வகுக்கக் கூடிய உயர்ந்த அளவிலான பாதுகாப்பான மென்பொருளினால் வலுப்படுத்தப்பட்டுள்ளதோடு, இணையத்தளத்திற்கு தமது கணணியுடன் இணையக்கூடிய உலகில் எந்த ஒரு இடத்திலுமுள்ள கொள்வனவாளர்களுக்கு இது திறந்து விடப்பட்டுள்ளது.

நீங்கள் ஏன் www.srilankabusiness.com இல் பதிவு செய்து கொள்ள வேண்டும்?

  • உங்கள் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களையும், சேவைகளையும் உயர்ந்த அளவிலான கிரய வினைத்திறனுடன் குறைந்த செலவில் மேம்படுத்தக் கூடியதாக உள்ளது.
  • பரந்த அளவிலான வாடிக்கையாளர் குழுவொன்று இலகுவாக அணுகக் கூடியதாக உள்ளமை
  • அரசாங்க அனுசரணையுடன் இலத்திரனியல் வர்த்தக மற்றும் வர்த்தக வாயிலூடாக உங்கள் வியாபாரத்தினை நம்பிக்கையுடன் விருத்தி செய்யக் கூடியதாக உள்ளமை.
  • தொடர்பாடல் மற்றும் விளம்பரச் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடையக் கூடியதாக உள்ளமை.
  • இணையத்தளத்தினூடாக நிகழ்நிலையில் கொள்வனவு செய்வதற்கான வசதி.
  • உங்கள் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை போக்குவரத்துத் துறையில் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் வாய்ந்த கம்பனிகளின் ஊடாக உரிய நேரத்தில் கொள்வனவாளரிகளுக்கு விநியோகம் செய்தல்.
  • பிரதான சர்வதேச வங்கியொன்றின் ஊடாக இரகசியத் தன்மையைப் பாதுகாக்கக் கூடிய வகையில் பாதுகாப்பு கொடுப்பனவு முறைமையொன்றினை மேற்கொள்ளக் கூடியதாக இருத்தல்.

பதிவு – இலவசம் (அதிகூடியது 10 பொருட்கள்)

வருடாந்த புதுப்பித்தல் கட்டணம் – 1,000/= ரூபா

ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் HSBC வங்கி தரகு கட்டணம் உள்ளடங்களாக 6% தரகு கட்டணமாக அறவிடப்படும்.

Download Application - EDB eMARKETPLACE


இனையதள வர்த்தக புள்ளிவிபர பதிவு

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை, இணையத்தளம் வழியாக இலங்கை வர்த்தக புள்ளிவிபரத்தை பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வருடாந்த கட்டணம் ரூபா 2,500/= இற்கு வழங்குகின்றது.

Download Application - online Trade Statistics


இணையத்தள விளம்பரங்கள்

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையானது ஏற்றுமதிகளின் மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்கு நாட்டின் மிக உயர்ந்த நிறுவனமாகும். www.srilankabusiness.com,எங்கள் உயர் தகவல் வலைத்தளம் பெரிய எண்ணிக்கையிலான உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதிநிதிகளால் அடிக்கடி வருகைதரப்பட்டுள்ளது, இது மிகவும் பயனுள்ள B2B சந்தை மற்றும் வலையமைப்பு தளத்தை உருவாக்குகிறது.எனவே,எங்கள் வலைத்தளத்தில் விளம்பரப்படுத்துவதன் மூலம்,உங்கள் வணிகத்திற்கான சிறந்த இணையத்தள வெளிப்பாட்டைப் பெறவும், அதனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவும் முடியும்.எங்கள் விளம்பர கொள்கை மற்றும் ஆக்கபூர்வமான வழிகாட்டல்களை பார்வையிடுவதன் மூலம் எவ்வாறு நீங்கள் எங்களுடன் விளம்பரப்படுத்த முடியும் என்ற தெளிவை பெறமுடியும். எம்முடன் விளம்பரப்படுத்துவதன் மூலம் எமது வெற்றியீட்டிய கதையில் நீங்களும் ஒரு பகுதியாகலாம்.

இணையத்தள விளம்பர கட்டணங்கள்

உள்ளூர் ஏற்றுமதியாளர்கள் - விளம்பர கட்டணங்கள் உள்ளூர் சேவை வழங்குனர்கள் - விளம்பர கட்டணங்கள் விண்ணப்பத்தை தரவிறக்க - இணையத்தள விளம்பரங்கள்