• Alt

    Sri Lanka's Apex Organisation for Export Promotion

    Explore

  • ஹைதராமணி குழு

    Hidramani Group

    ஹைதராமணி 1890 ஆம் ஆண்டில் சட்டரீதியாக ஆரம்பிக்கப்பட்டதோடு பரமானந்த் ஹைதரமணி 16 வயதாக இருக்கும் போதே கோட்டை, செத்தம் வீதியில் உருண்டைக் கற்களினால் பொருத்தப்பட்ட நடை பாதையில் சிறிய ஒரு சில்லறை விற்பனை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்நவீன சில்லறை முயற்சி தொடர்ந்து வெற்றியடைந்தமையினால், இச்சிறிய அளவிலான ஆரம்பத்திலிருந்து வந்த எழுச்சியானது நவீன கண்டுபிடிப்புக்களை மேற்கொண்ட ஹைதராமணயின் தனித்துவமானது விமான மூலமும் பரவத் தொடங்கியதோடு, ஐம்பதுகள் அறுபதுகள் பூராகவும் பிரதான இலச்சினைகளைக் கொண்ட ஆண்களின் உடைகளான பொப்பியுளர்(Popular) மற்றும் டிப்ளொமட் (‘Diplomat’ )உடன் வடிவமைப்புச் சில்லறைக் கைத்தொழிலின் முன்னோடிகளாக 1940 இல் ஹைதராமணி லிமிட்டட்டாக அது ஸ்தாபிக்கப்பட்டது.

    960 களில் ஹைதராமணி மகரகமவில் அதன் முதலாவது ஏற்றுமதி அளவிலான தொழிற்சாலையான சிலோன் நிட் டிரென்ட் டிரைவாகக் கூடிய ஒரு கைத்தொழிலாக ஸ்தாபித்ததோடு, அது பின்னர் இலங்கையின் மிகப் பிரதானமான இலாபகமான தொழில் முயற்சியாக இம்முன்னோடிக் கைத்தொழில் நகர்ந்தது. மேலும், ஹைதராமணிக் குழு தொடர்ந்து விரிவாக்கப்பட்டதோடு, நாடு பூராகவும் பல தொழிற்சாலைகளை நிறுவியது. ஹைதராமணி இலங்கை, வங்காளதேசம், மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் 33 தொழிற்சாலைகளில் 40,000 இற்கும் அதிகமான தொழிலாளர்களுடன் உலகளாவியரீதியிலான ஒரு வா்த்தகமாகத் திகழ்கின்றது.

    இலங்கையில் ஹைதராமணி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வடிவமைப்பு வா்ணம் தீட்டல், அச்சிடல், சித்திரத் தையல் வேலை வசதிகள் போன்றவற்றினை ஒன்றிணைப்பதன் மூலம் மாதாந்தம் 5 மில்லியன்களுக்கும் அதிகமான ஆடைகளை விநியோகிக்கும் 20 ஆடைத் தொழிற்சாலைகளைக் கொண்;டுள்ளது

    ஹைதராமணியின் உலகத் தரத்திலான உற்பத்திப் பொருட்களின் அபிவிருத்தி நிலையம், அனுபவமிக்க, திறன் வாய்ந்த வடிவமைப்பாளா்கள் மற்றும் ஆடைக் கைத்தொழிலுக்கான ஒரே நிலையத்திலேயே சகல வசதிகளையும் வழங்கக் கூடிய வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

    முழுமையான உட்கட்டமைப்பினதும், அனுபவமிக்க ஹைதராமணிக் குழுவினதும் ஆதரவின் மூலம் பல்வேறு பட்ட, பல்வேறு அளவிலான கையால் நெய்யப்பட்ட, பின்னப்பட்ட ஆண்களினதும், பெண்களினதும், சிறுவா்களினதும் பூர்த்தி செய்யப்பட்ட சாதாரண, மற்றும் அந்தரங்க ஆடைகளையும் விநியோகிக்கின்றது.

    உற்பத்திப் பொருட்களின் தொடர்ச்சியான நவீன கண்டுபிடிப்புக்கள், மற்றும் கம்பனிக்கு நற்கீர்த்தியை அள்ளிக் கொடுத்த விதி முறை தவறாத கட்டிறுக்கமான தர நிர்ணயங்களை தொடர்ச்சியாகப் பேணுவதன் ஊடாக மார்க் அன்ட் ஸ்பென்சர் (Marks & Spencer),டெஸ்கோ (Tesco), ட்ரூ ரிலியன் (True Religion), லெவிஸ் (Levi’s),ரள்ப் லோரன் (Ralph Lauren) டொம்மி கில்பிகர் (Tommy Hilfiger) போன்ற பிரதான சர்வதேச இலச்சினைகளுக்கு முன்னுரிமை பெற்ற தெரிவாக ஹைதராமணி விளங்குகின்றது.

    2008 இல் ஹைதராமணி உலகின் முதற் தெரிவான “மிகில” லீட் தங்க சான்றினைப் பெற்ற சுற்றாடல் ரீதியாக நட்புறவான ஆடைத் தொழிற்சாலையொன்றைத் திறந்தது. கம்பனியின் நிலைபேறான தன்மைக்கான உறுதியான அணுகுமுறையை எதிரொலிப்பதன் மூலம் மிகில 2011 இல் ஆசியாவின் முதலாவது காபன் நடுநிலையான ஆடைத்தொழிற்சாலைக்கான சான்றுப்படுத்தல் உள்ளடங்கலாக பல விருதுகளை வெற்றியீட்டியுள்ளது. இக்கம்பனியானது பச்சைத் தயாரிப்புக்களுக்கான தர நிர்ணயத்தினை வரிசைப்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டமையினால் மிகிலவிலான அனுபவங்கள் ஹைதராமணிக் குழுமின் பரந்த பசுமைப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்திற்கான அடித்தளமாக வைக்கப்பட்டது.

    இக்கம்பனியானது இலங்கையின் ஆடைக் கைத்தொழிலின் மாற்றத்திற்கும், கண்டுபிடிப்புக்குமான சிறந்த ஒரு தலைவராகவும், நுகைப்பானாகவும் உள்ளதால் அதன் கலையும் அதனைச் சூழவுள்ள மக்களுக்கான பொறுப்பிற்கான கட்டற்ற உணா்வு பூர்வமான செயற்பாட்டுடன் பிணைந்த ஒரு முன்னோடியாவதற்கான விருப்பு ஹைதராமணி குழுவின் வெற்றிக்கு ஒரு தனியிடத்தைக் கொடுத்துள்ளது

    Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Quisque cursus elementum pellentesque. Phasellus scelerisque facilisis sollicitudin. Maecenas tincidunt cursus malesuada. Cras rhoncus, dui at semper accumsan, massa erat finibus odio, ac auctor mi massa non risus. Fusce pharetra congue augue at dapibus. Vestibulum finibus quam eget erat volutpat mattis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.