வர்த்தகத் தகவல்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வர்த்தகத் தகவல் சேவை சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் தகவல் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்வதற்கு நாம்

  • தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அடிக்கடி புதுப்பிக்கப்பட்ட சர்வதேச தகவல் மூலங்களை பரிசீலனை செய்வோம்
  • பயன்பாட்டாளர்கள் தரவுகளிலிருந்து விளக்கம் பெறுவதற்கு உதவக்கூடிய வகையில் தகவல்கள், மீள்பொதியிடல் ஆகியனவற்றிற்கு பெறுமதிசேர்த்தல்

வர்த்தகத் தகவல்களின் சகல நிலைகளும் உள்ளடங்கலாக தேவையை அடிப்படையாகக் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட கணணிமயப்படுத்தப்பட்ட தகவல் முறைமை ஒன்றின் அபிவிருத்தி தொடர்பாக எமது சேவை மையப்படுத்தப்பட்டுள்ளது

தகவல்கள் பின்வரும் சேவைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றது

வர்த்தக நூலகம்

உங்கள் வியாபாரத்தினை ஆரம்பிப்பதற்கும் பேணுவதற்கும் மற்றும் வளர்ச்சியுறச் செய்வதற்கும் அவசியமான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சர்வதேச வர்த்தகம் மற்றும் வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட வருடாந்த அறிக்கைகள், ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள், ஏற்றுமதிச் சந்தை தொடர்பான அளவை ஆய்வுகள், ஆராய்ச்சிகள், மீளாய்வு அறிக்கைகள், சஞ்சிகைகள், கடிதங்கள் போன்ற சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடைய பரந்த அளவிலான அறிக்கைகள் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் நூலகத்தில் காணப்படுகின்றன. மேலும் வாசிப்போரின் அறிவை வளர்ச்சியுறச் செய்வதற்காக ஏற்றுமதிப் பொருட்கள் மீதான தீர்வைகள், புள்ளிவிபரங்கள், விலைகள், கம்பனித் தகவல்கள், போன்ற குறிப்பிட்ட தலைப்புக்களுக்கான ஆதார நூற்பட்டியல் மற்றும் இலத்திரனியல் வடிவங்களிலான குறிப்புச் சாதனங்களின் முழுமையான சேகரிப்புக்களையும் அது வழங்குகின்றது. சர்வதேச வர்த்தக நிலையம் (ITC), நெதர்லாந்து இறக்குமதி மேம்பாட்டிற்கான நிலையம் (CBI), ஜப்பான் வெளிவாரியான வர்த்தக பிராந்திய நிறுவனம் (JETRO) பொருளாதார ஒத்துழைப்பிற்கான அபிவிருத்தி நிறுவனம் (OECD), பொதுநலவாய செயலகம், சர்வதேச நாணய நிதியம் (IMF)இ உலக வங்கி போன்றவற்றினால் வெளியிடப்பட்ட வெளியீடுகள் மற்றும் சந்தை அறிக்கைகளும் கிடைக்கக் கூடியதாக உள்ளன.

பொது மக்களுக்காக நூலக வசதிகள் கிழமை நாட்களில் அலுவலக நேரங்களில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் 7 ஆம் மாடியின் நூலக வளவில் திறந்து வைக்கப்படும். அங்கு வருகை தருவோருக்கு வர்த்தக சமூகத்திற்கான நூலக வளங்கள் மற்றும் கிடைக்கக் கூடிய வசதிகளைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களும், உதவியும் வழங்கப்படும்.


இலத்திரனியல் சந்தைத் தகவல்கள்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளமான www.srilankabusiness.com இலங்கையின் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை உலகளாவிய சந்தைகளில் மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளம் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுக் கொள்வனவாளர்களுக்கு அவசியமான தகவல்கள், ஏற்றுமதியாளர்களுக்கு அவசியமான தகவல்கள், மற்றும் சாதாரண தகவல்களை வழங்குவதன் மூலம் பல்வேறு வகையான அனுசரணைகளுக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதில் முக்கியமான தொழிற்பாட்டினை மேற்கொள்கின்றது

வெளிநாட்டுக் கொள்வனவாளர்கள் இலங்கையின் சகல ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான சகல தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்கான ஒரே நிலையமாக www.srilankabusiness.com பயன்படுத்த முடியும்

இலங்கையின் ஏற்றுமதியாளர்களுடன் தொடர்புடைய சந்தைகள் தொடர்பான விபரங்கள், சந்தைகளின் சுருக்க அறிக்கை, சந்தைகளுக்குள் பிரவேசிப்பதற்கான அறிவுரைகள், சந்தைகளின் போக்கு தொடர்பான அறிக்கைகள், கொள்வனவாளர் தொடர்பான முகக்குறிப்புக்கள், செய்திகள், வலைப்பதிவுகளில் வெளியிடப்பட்டுள்ள கடிதங்கள் தொடர்பான பெறுமதியான தகவல்கள் போன்ற இன்னோரன்ன தகவல்களை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளமான www.srilankabusiness.com ஊடாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதோடு அதன் ஊடாக உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் உலக சந்தைக்குள் உள்ள வர்த்தக வாய்ப்புக்களையும் மற்றும் உலக சந்தையிலுள்ள வர்த்தகப் போட்டித் தன்மையையும் பேணும் நோக்குடன் மிக இலகுவான முறையில் நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கும்.)


வெளியீடுகள்

பிசினஸ் லங்கா சஞ்சிகை

EDB மூலம் காலாண்டிற்கு ஒரு முறை வெளியிடப்படும் பிசினஸ் லங்கா சஞ்சிகை ,வர்த்தக, பொருளாதாரம், முதலீடு மற்றும் தயாரிப்பு தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது. இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர பிரதிநிதிகள், வர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனங்களிடையே இந்த சஞ்சிகை விநியோகிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக இலங்கை ஏற்றுமதியாளர்கள் / உற்பத்தியாளர்கள், பயனுள்ள விளம்பர கருவியாக இந்த சஞ்சிகையை பயன்படுத்தப்படலாம்.

தொடர்புகளுக்கு :

திருமதி.சாந்தனி ரத்னாயக்க,
துனை பணிப்பாளர்
தொலைபேசி : +94-11-2302072
மின்னஞ்சல் - [email protected]

Business Lanka Magazine - Vol. 30 -Issue 04/2017
- (Green Construction - A Sustainable Future)
Business Lanka Magazine - Vol. 30 -Issue 03/2017
- (Sri Lankan Fisheries)
Business Lanka Magazine - Vol. 30 -Issue 02/2017
- (Foray into Organic Lives)
Business Lanka Magazine - Vol. 30 -Issue 01/2017
- (The Evolution of Service Infrastructure)
Business Lanka Magazine - Vol. 29 -Issue 01/2016
- (World Export Development Forum - WEDF 2016)

எக்ஸ்போ நியூஸ்

மாதாந்த மின்-செய்திமடல் "எக்ஸ்போ நியூஸ்", இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு தயாரிப்பு / சந்தை போக்குகள், சர்வதேச விலைகள், வர்த்தக வாய்ப்புகள், ஊக்குவிப்பு சர்வதேச வர்த்தக கண்காட்சி / கருத்தரங்குகள் / விழாக்கள் மற்றும் கண்காட்சிகள் (வெளிநாடு மற்றும் உள்ளூர்) மற்றும் வர்த்தக நிகழ்வுகள் பற்றிய EDB நாட்காட்டி ஆகியவற்றின் நிகழ்கால தகவல்களை வழங்குகிறது. விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவதுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பின்வரும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடியும் : [email protected]

தொடர்புகளுக்கு :

திரு.சகீர் அன்சாரி,
முகாமைத்துவ உதவியாளர்
தொலைபேசி : +94-11-2300705-11 Ext : 321
மின்னஞ்சல் - [email protected]

பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்யவும்

அச்சிடப்பட்ட வெளியீடுகள்

இலங்கையின் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதிச் செயன்முறைகள் போன்ற இன்னோரன்னவைகள் தொடர்பான விற்பனைக்குரிய வெளியீடுகளை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் நூலகத்திலிருந்து கொள்வனவு செய்யக்கூடியதாக உள்ளது.

தொடர்புகளுக்கு :

செல்வி. எம்.டப்ளியூ.ஆர்.சீ தர்மவர்தன,
பிரதிப் பணிப்பாளா்
தொலைபேசி : +94-11-2300678
மின்னஞ்சல் - [email protected]


கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள்

தயாரிப்பு மற்றும் சந்தை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் சமீபத்திய சந்தை நுண்ணறிவை பற்றிய அறிதல் மற்றும் பரப்புதல் பற்றிய அறிவிற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இணையம் வழி சர்வதேச தகவல் சேவைகள் அணுகல்

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சந்தை நுண்ணறிவை வழங்க, ITC - வர்த்தக வரைபடம், சந்தை அணுகல் வரைபடம், முதலீட்டு வரைபடம், வர்த்தக போட்டி வரைபடம், நியமங்கள் வரைபடம், சந்தை செய்தி சேவை (MNS) போன்ற உலகளாவிய தகவல் ஆதாரங்களுக்கான மின்னணு இணைப்புகள்

சர்வதேச கொள்வனவாளர் தேடல்

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை உலகளாவிய தரவு தளங்களில் ஊடாக தேடப்பட்ட கொள்வனவாளர்களின் தகவல்களை வழங்குகின்றது.