வர்த்தகக் கண்காட்சிகள்

வர்த்தகங்களுக்கு இடையிலான B2B மேம்பாட்டு வசதியளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் பிரதான வர்த்தகக் கண்காட்சிகளுக்கு உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் பங்கேற்பினை இலங்கையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இவ்வர்த்தகக் கண்காட்சிகளுக்கு இடையில் ஏற்றுமதிக் கைத்தொழிலை மேம்படுத்துவதனை குறிக்கோளாகக் கொண்ட வசேட வர்த்தகக் கண்காட்சி, பல ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை மேம்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்படும் வர்த்தகக் கண்காட்சி, பிராந்திய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும் வர்த்தகக் கண்காட்சிகள், பல்பொருள் வர்த்தக் கண்காட்சி ஆகியன உள்ளடங்குகின்றன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படும் இவ்வர்த்தகக் கண்காட்சி தொடர்பாக டெய்லி நியூஸ் (ஆங்கிலம்), தினமின (சிங்களம்), நவமணி (தமிழ்) போன்ற அச்சிடப்பட்ட ஊடகங்களின் ஊடாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்கள் தெரியப்படுத்தப்படுகின்றனர்.