வர்த்தக புள்ளிவிபரங்கள்

இலங்கை சுங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கோப்பகம் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு வந்து பெற்றுக் கொள்ள முடியும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கோப்பகம் இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம், பிரதான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சந்தைகள், சந்தையின் பங்கும், சந்தை வளர்ச்சி, போன்றன சந்தை ஆராய்ச்சி மற்றும் சந்தைத்தெரிவு போன்றனவற்றுக்கு பிரதான ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும். இலங்கை எற்றுமதி அபிவிருத்திச் சபை ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பதற்கு கைத்தொழிலின் பங்கேற்பாளர்களுக்கு பயன்படக் கூடிய பிரதான தரவுகள், தரவுடிப்படைகள், மற்றும் புள்ளி விபர ஆராய்ச்சி அறிக்கைகள் போன்றனவற்றையும் பேணி வருகின்றது

வருடாந்த சந்தாப் பணம் - ரூபா 2500/=

பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

நீங்கள் ஏற்கனவே ஏற்றுமதிப் புள்ளிவிபரங்களுக்கு சந்தாப் பணம் செலுத்தியிருந்தால், பின்வரும் இணைப்பினை அழுத்துவதன் மூலம் உங்களது இணையத்தளக் கணக்கிற்குள் உள்நுழையவும்

ஏற்றுமதி செயல்திறன் குறிகாட்டி

ஏற்றுமதி செயல்திறன் குறிகாட்டிகள் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதான புள்ளிவிபர வெளியீடு ஆகும், இது நாட்டின் ஏற்றுமதித் துறையின் செயல்திறன் பற்றிய விரிவான பகுப்பாய்வை அளிக்கின்றது.

ஏற்றுமதி செயல்திறன் காட்டி தரவிறக்க, பின்வரும் தொடர்பைக் கிளிக் செய்க: