பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சாத்தியமான ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களையும், சான்றிதழ் பாடநெறிகளையும் நடாத்தி வருகின்றது

சர்வதேச வர்த்தகம் தொடர்பான செயற்பாட்டு நோக்குகள் தொடர்பான பாடநெறி

யாருக்காக

சர்வதேச வாத்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் சிரேஷ்ட மற்றும் நடுத்தர மட்ட நிறைவேற்றுனர்களுக்காக இப்பாடநெறி இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது

பாடநெறியின் உள்ளடக்கம்

முதலாம் அலகு – ஐந்து (05) சனிக்கிழமைகள்

 • சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளின் நிதி மற்றும் சட்ட ரீதியான நோக்குகள்
 • பேரம் பேசும் திறன்கள்
 • விற்பனைத் தொடர்புகள்
 • பொருட்களின் போக்குவரத்தின் ஒப்பந்தங்கள்
 • கொடுப்பனவுகளைத் தீர்ப்பனவு செய்யும் முறைமைகள்
 • இறக்குமதி ஏற்றுமதி மீதான நிதியீடு
 • கிரயமிடலும் விலை நிர்ணயிப்பும்
 • INCOTERMS(2010)
 • பாரிமாற்ற இடர்கள்
 • முரண்பாடுகளைத் தீர்த்தல்
 • முன்னுரிமை வர்த்தகம்
 • நிதியீட்டினை சிறு காரணிகளாகப் பிரித்தல்
 • இலத்திரனியல் வர்த்தகம்

இரண்டாம் அலகு - ஐந்து (05) சனிக்கிழமைகள்

 • இறக்குமதி / ஏற்றுமதிகளின் செயன்முறைகளும், மேம்பாடும்
 • பொருட்களை கப்பலில் அனுப்பி வைத்தல் (பொருட்களின் போக்குவரத்து)
 • சுங்கச் செயன்முறைகள்
 • இலங்கைத் துறைமுக அதிகார சபையின் செயன்முறைகள்
 • பொருட்களின் இறக்குமதியில் தீர்வையற்ற பிரவேசம்
 • ஏற்றுமதிப் பொதியிடல்
 • கடல் சார் காப்புறுதி
 • விமானம் மூலமான பொருட்களின் போக்குவரத்துச் செயன்முறை
 • முதலீட்டுச் சபையின் செயன்முறைகள்
 • இறக்குமதி ஏற்றுமதிச் செயன்முறைகள்
 • இணையத்தள வரத்தகம்

இலங்கைச் சுங்கத்திற்கும் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வான் வழி மூலமான பொருட்களின் போக்குவரத்து முனையத்திற்குமான கள விஜயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது

Course Fee - Rs. 25,000/- for the programme. (Rs.10,000/- per Module plus Rs.5,000/-For the Field Visit)

தொடர்புகளுக்கு :

திருமதி ரம்யா தர்மவர்தன பிரதிப்பணிப்பாளா்

தொலைபேசி:+94 11 2300678

Fax No: +94 11 2300676

மின்னஞ்சல்: [email protected]

பதிவிற்கான விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

இறக்குமதி ஏற்றுமதிச் செயன்முறைகள் தொடர்பான சான்றிதழ் பாடநெறி

யாருக்காக

சுங்க அப்புறப்படுத்தல்கள் மற்றும் பொருட்களைக் கப்பலிலேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை இலக்காகக் கொண்டு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் இச்சான்றிதழ் பாடநெறி ஏற்பாடு செய்யப்படுகின்றது.

பாடநெறியின் உள்ளடக்கம்
 • ஏற்றுமதிச் செயன்முறைகளும், சான்றிதழ் தொடர்பான அறிமுகமும்
 • ஏற்றுமதிச் செயன்முறைகள் தொடர்பான அறிமுகம்
 • சுங்க இறக்குமதி, ஏற்றுமதி முறிகளின் செயன்முறைகளும், ஆவணங்களும்
 • துறைமுகச் செயன்முறைகளும், ஆவணங்களும்
 • வான்வழி மூலமான பொருட்களின் போக்குவரத்துச் செயன்முறைகளும்
 • முதலீட்டுச் சபையின் செயன்முறைகள்
 • சர்வதேச வர்த்தகத்தில் வங்கிச் செயன்முறைகள்
 • )இறக்குமதியின் போதும், ஏற்றுமதியின் போதும் தர நியமக் கட்டுப்பாட்டினை மேற்கொள்ளல்
 • பொருட்களின் தரக்கட்டுப்பாடு
 • போக்குவரத்து காப்புறுதி
 • சர்வதேச வர்த்தகத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய ஏனைய தேவைப்பாடுகள்)

Course Fee - Rs. 20,000/- for the programme. (Rs.15,000/- for course fee plus Rs.5,000/-For the Field Visit)

பாடநெறிக்கான புத்தகங்களும், சிற்றுண்டிகளும் வழங்கப்படும்.

காசோலையானது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பெயருக்கு எழுதப்படல் வேண்டும்.)

தொடர்புகளுக்கு :

திருமதி ரம்யா தர்மவர்தன பிரதிப்பணிப்பாளா்

தொலைபேசி:+94 11 2300678

Fax No: +94 11 2300676

மின்னஞ்சல்: [email protected]

சான்றிதழ்கள்

பாடநெறியின் இறுதியில் நடாத்தப்படும் கணிப்பீட்டுப் பாரீட்சையில் சித்தியடைவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்

பதிவிற்கான விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்