ஏற்றுமதிச் சந்தைப்படுத்தல்

சந்தை ஆய்வு, ஏற்றுமதிச் சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைச் சேவைகள், வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கைகள், மற்றும் வர்த்தகத் தகவல்களை வழங்குவதன் ஊடாக இலங்கை உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதிச் செயலாற்றுகையின் அபிவிருத்தி, மற்றும் முன்னேற்றம் போன்றவற்றிற்கு ஆதரவளித்தலானது இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

வர்த்தகக் கண்காட்சிகள்

வர்த்தகங்களுக்கு இடையிலான B2B வர்த்தக மேம்பாட்டு வசதிகளை மேற்கொள்வதற்காக ஏற்பாடு செயயப்படும் பிரதான சர்வதேச மட்டத்திலான வர்த்தகக் கண்காட்சிகளுக்கு உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் பங்கேற்பினை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படும். இவ்வர்த்தகக் கண்காட்சிகளுக்கு இடையில் ஏற்றுமதிக் கைத்தொழில் மேம்பாட்டினைக் குறிக்கோளாகக் கொண்ட வசேட வர்த்தகக் கண்காட்சிகள், பல் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்படும் கண்காட்சிகள், பிராந்திய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும் கண்காட்சிகள் தனிப்பட்ட கண்காட்சிகள் போன்றன உள்ளடக்கப்படும். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் எற்பாடு செய்யப்படும் இவ்வர்த்தகக் கண்காட்சிகள் தொடர்பாக டெய்லி நியூஸ் (ஆங்கிலம்), தினமின (சிங்களம்), நவமணி (தமிழ்) ஆகிய இன்னோரன்ன அச்சிடப்பட்ட ஊடக மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளத்தின் ஊடாக பொது மக்கள் விழிப்புணர்வூட்டப்படுவார்கள்.

உள்வாரியானதும், வெளிவாரியானதுமான விற்பனை செய்தல் / கொள்வனவு செய்தல் தூதுவர் குழுக்களின் செயற்பாடுகள்

உள்நாட்டு ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்தலும், மற்றும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்குமான தூதுவர் குழுக்களின் செயற்பாடுகளை ஏற்பாடு செய்தலும், உள்நாட்டு ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களினதும், மற்றும் சேவைகளினதும் சந்தைப்படுத்தலுக்கு ஆதரவளிக்கப்படும்.

  • உள்நாட்டு ஏற்றுமதியாளர்களையும் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களையும் ஒருவருக்கொருவர் சந்திக்கச் செய்தல்
  • கொள்வனவாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் ஆதரவளித்தல்
  • மாநாடுகள் / செயலமர்வுகள் ஏற்றுமதி அளவை வளர்ச்சியுறச் செய்வதுடன் சார்ந்த பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்
  • வளர்ந்து வரும் ஏற்றுமதிக் கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்காக ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களின் தரத்தினை விருத்தி செய்வது தொடர்பான விழிப்புணர்வூட்டும்; நிகழ்ச்சித் திட்டங்கள் , ஒன்றிணைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் ஏற்றுமதிச் சந்தைப்படுத்தலுக்கு ஆதரவளிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடுசெய்தல்
  • சன்னாம பெயர்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல்
  • இலங்கையின் வர்த்தகப் பிரதிபிம்பத்தினையும், மற்றும் பொருட்களின் தன்னிகரற்ற தன்மையை சர்வதேசரீதியில் பிரபல்யப்படுத்தல்
  • ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவை விற்பனைகளுக்கு ஆதரவளித்தல்
  • சந்தைக்குள் பிரவேசிக்கும் போது உருவாகும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மற்றும் தடைகளைக் குறைப்பதற்கும் உதவுதல்
  • ((ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைக்குள் பிரவேசிக்கும் போது செலுத்த வேண்டிய தீர்வை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், ஏனைய வரியல்லாத தடைகளைக் குறைப்பதற்கும் உதவுதல்